

சென்னை: கொலைக்கு பழி தீர்க்க வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போரூர், பாரதியார் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் தினேஷ் (23). இவரதுநண்பர் முகமது அஜீம் (22). இருவரும் கடந்த 2 மாதங்களாக இந்த வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், நுங்கம்பாக்கம் தனிப்படை போலீஸார் நேற்று வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் கத்திகள், ஒரு கிலோகஞ்சா மற்றும் 5 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுடெடுக்கப்பட்டன.
இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில், தினேஷின் நண்பரான குள்ள குமார் (21) என்பவரை 2 மாதத்துக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் வைத்து தனசேகர் என்பவரது தரப்பினர் கொலை செய்ததாகவும், இந்த கொலைக்குதனசேகரை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிவீட்டில் பதுக்கி வைத்து, சமயம் பார்த்து இருவரும் காத்திருந்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தினேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் முகமது அஜீம் மீதும் வழக்குகள்இருப்பதையும் போலீஸார்தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போரூர் போலீஸாரிடம் ஒப்படைத்த பின்னர், விசார ணைக்காக இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. 5 நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் போலீஸார் எடுத்து சென்றனர்.