சின்னசேலம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் தந்தை கைது

சின்னசேலம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் தந்தை கைது
Updated on
1 min read

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், கடந்த 2011-ல் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம் பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த மாதம் 1- ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது மகள் சோகமாக இருந்ததை கண்டு அவரது தாய் விசாரித்துள்ளார். தனது கணவர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பகலவன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மகளிர் இன்ஸ்பெக்டர் புவனேஸ் வரி மற்றும் போலீஸார், சிறுமி யின் தந்தையை குண்டர் சட் டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in