நெல்லை | மூதாட்டி மர்ம மரணத்தில் திருப்பம் - மகனே தாயை எரித்து கொன்றது அம்பலம்

நெல்லை | மூதாட்டி மர்ம மரணத்தில் திருப்பம் - மகனே தாயை எரித்து கொன்றது அம்பலம்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெற்ற மகனே தனது தாயாரை எரித்து கொலை செய்தது போலீஸார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை (47). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் அரசம்மாள்(70). இவர் அண்ணாமலை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அரசம்மாள் வீட்டினுள் தீயில் கருகி உயிரிழந்து கிடந்தார்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது தாயார் தற்கொலை செய்திருக்கலாம் என்று அண்ணாமலை முதலில் கூறியிருந்தார். ஆனால், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

எனவே, போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது அண்ணாமலையும் அவரது மனைவி அனிதாவும் சேர்ந்து அரசம்மாளை தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. அண்ணாமலை, அனிதா இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குடும்ப பிரச்சினையில் பெற்ற மகனே தனது தாயை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in