ஓசூரில் காணாமல்போன குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

ஓசூரில் காணாமல்போன குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 6 மாத குழந்தையை 5 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய பெண்னை கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் ராம்கேவர் (27). இவர் ஓசூர் மகாதேவபுரம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிய நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் ஓசூர் பேருந்து நிலையம் வந்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் குடும்பத்தினருடன் உறங்கினார்.

நேற்று காலை 5 மணிக்கு ராம்கேவர் எழுந்தபோது, அவரது மனைவியின் அருகில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு பெண் கைக்குழந்தையுடன் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவரிடம் ரூ.20 கேட்டது தெரியவந்தது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜா கொடுத்த தகவலின்படி ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் குழந்தையுடன் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஸ்வரியை கைது செய்தனர். மேலும், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காணாமல்போன குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீஸாரை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி.சரோஜ்குமார் தாகூர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in