

திருவள்ளூர்: ஆவடி அருகே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியில் வசித்து வரும்வெங்கடேசன் என்பவர் சிறுமியுடன் நெருக்கமாக பழகி பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு, வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா உடந்தையாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஜூன் 2- ம் தேதி வெங்கடேசனின் அக்கா லலிதா, சிறுமியிடம் மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று மேலும் 2 பேர் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனிடையே, சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், தனது மகளிடம் விசாரித்தபோது நடந்த உண்மையை கூறினார்.
இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஆவடி மகளிர்போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன், விஜயா, லலிதா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவெங்கப்பன், பாலாஜி மற்றும் அருணகிரி ஆகிய ஆறு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.