

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை அடுத்த சின்னத்துறையைச் சேர்ந்தவர் ஜோக்லின்(45). மீனவரான இவர் கடந்த 2016 மே 22-ம் தேதி ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஜோக்லினை நித்திரவிளை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்தது. ஜோக்லினுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார்.