

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் சாலையில் சத்தியம் கிராண்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் மிகப் பெரிய கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஹருண் ஹல்தர் நட்சத்திர விடுதியில் ஆய்வு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினியை பெரும்புதூர் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் விடுதி உரிமையாளர் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.