சென்னை விமான நிலையத்தில் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 5 கிலோ 935 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னைக்கு சிலர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 3 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் கொண்டு வந்திருந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்தனர். அதில் ரூ.1.63 கோடி மதிப்புள்ள 3.740 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, வருகை பகுதி எண் 5-ல் கேட்பாரற்று இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ.96.09 லட்சம் மதிப்புள்ள 2.195 கிலோ தங்கம் இருந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்து இங்கு போட்டுச் சென்றவர்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in