Published : 21 Oct 2022 07:04 AM
Last Updated : 21 Oct 2022 07:04 AM

தூத்துக்குடி | போலீஸாரை சுட முயன்ற 2 ரவுடிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் திடீரென, மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீஸாரை சுட முயன்றுள்ளார். 2 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (44), எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முனியசாமி (45) என்பது தெரியவந்தது. அவர்களிடம் கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் இருந்தன. ஜான்சன் மீது தூத்துக்குடி போலீஸில் 4 கொலை வழக்குகள் உட்பட 24 வழக்குகள், முனியசாமி மீது 4 கொலை வழக்குகள் உட்பட 9 வழக்குகள், திருநெல்வேலியில் ஒரு கொலை வழக்கு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x