

சென்னை: சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (29). திருமணமானவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்.19-ல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீஸார், மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.