

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ரூ.36 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றிய வங்கி மேலாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தேவகோட்டை ஒரு வங்கி மேலாளராக இருப்பவர் பாலகிருஷ்ணன் (59). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சையது (68) என்பவரும் நடைபயிற்சியின் போது நண்பர்களாகினர்.
இந்த பழக்கத்தில் தனது மகளின் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ.36 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகள் ஆகியவற்றை சையதிடம் பாலகிருஷ்ணன் வாங்கினார். ஓராண்டுக்கு மேலாகியும் பணம், நகைகளை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி செந்தில் குமாரிடம் சையது புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நர்மதா, வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.