

கொல்கத்தா: கொல்கத்தா போலீஸார் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சைலேஷ் பாண்டே மற்றும் அரவிந்த் பாண்டே. இவர்கள் இருவரும் சகோதரர்கள். இந்த இரண்டு தொழிலதிபர்களும் தங்களது வங்கி கணக்குகளில் அக்டோபர் 14-ல் அதிக அளவிலான தொகையை பரிமாற்றம் செய்துள்ளனர்.
வங்கிகள் அளித்த புகாரின் படி நடந்த சோதனையில் அவர்களது வீடுகள் மற்றும் காரில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு தொழிலதிபர் சகோதரர்கள் மீதும் வங்கி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.