

உத்தர பிரதேசத்தில் 300 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சீறிப் பாய்ந்தது சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப் பட்டது. அப்போது விபத்து ஏற்பட்டு காரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ் சல் எக்ஸ்பிரஸ் சாலை 340 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த 6 வழிச் சாலையில் சில நாட்களுக்கு முன்பு பிஎம்டபிள்யூ சொகுசு கார் சீறிப் பாய்ந்தது.
பிஹாரை சேர்ந்த போலோ குஷ்வாலா, தீபக் ஆனந்த், அகிலேஷ் சிங், ஆனந்த் குமார் ஆகியோர் காரில் பயணம் செய்தனர். போலோ குஷ்வாலா காரை ஓட்டினார். எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சீறிப் பாய்ந்த வேகம் சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. 230 கி.மீ. வேகத்தில் கார் சென்றபோது ஒருவர் பயத்தில் அலறினார். இந்த வேகத்தில் சென்றால் 4 பேரும் உயிரிழந்து விடுவோம் என்று எச்சரித்தார்.
ஆனால் காரை ஓட்டிய போலோ குஷ்வாலா வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார். 300 கி.மீ. வேகத்தில் கார் சீறிப் பாய்ந்தது. ஹாலியாபூர் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் 4 பேரின் தலைகளும் துண்டிக்கப்பட்டன. ஒருவரின் உடல் இரண்டாகப் பிளந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:பிஎம்டபிள்யூ கார் முதலில் 63 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. அப்போதிருந்தே சமூக வலைதளத் தில் நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளனர். நேரலையில் 230 கி.மீ. வேகம் வரை கார் செல்வது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 300 கி.மீ. வேகத்தை கார் தொட்ட போது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியிருக்கிறது.
சமூக வலைதளத்தில் தங்களை கதாநாயகனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விபரீத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மருத்துவர். மற்றொருவர் இன்ஜினீ யர். இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.