

பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில், கடந்த 22-ம் தேதி இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், டீசல் திரவத்தை ஊற்றியும் சேதப்படுத்திய சம்பவத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் உறுப்பினராக இருந்த அப்துல் ஜலீல் (34) என்பவரை, மேற்கு காவல்நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமாக செயல்பட்டதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் பரிந்துரையின்பேரில், அப்துல் ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்துல் ஜலீல் (34) சிறையில் அடைக்கப்பட்டார்.