

திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. இதில், அறை எண் 31-ல் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வெள்ளை ராஜா(எ) அரவிந்த்(25) என்பவர் மறைத்து வைத்திருந்த ஒரு செல்போனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, மதுரை சவுராஷ்டிரா காலனி திருநகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(22), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகேயுள்ள வேம்பத்தூரைச் சேர்ந்த முகிலன்(எ) ரவி(24), மேற்கு வங்கம் இஸ்கரா பகுதியைச் சேர்ந்த லேடன் தாஸ்(25) ஆகியோரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, சிறை அலுவலர் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் வெள்ளைராஜா, விக்னேஷ், முகிலன் ஆகியோர் மீது கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.