மதுரையில் பொறியாளர் சந்தேக மரணம் - போலீஸ் விசாரணை

மதுரையில் பொறியாளர் சந்தேக மரணம் - போலீஸ் விசாரணை
Updated on
1 min read

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (30). இயந்திர பொறியியல் (mechanical engineering) படித்துள்ள இவர், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதுரை பாண்டிக் கோயில் அருகிலுள்ள பிரபல தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதற்காக அவர் மதுரை உத்தங்குடி பகுதியில் வீடு எடுத்து தனது தாயாருடன் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி பணியில் இருந்த போது, 4வது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது சகோதரர் விக்கேஷ் கொடுத்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் ராஜாங்கம் விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், அவருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும், அதைதொடர்ந்து மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவரது உறவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனாலும், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in