

பல்லடம் பகுதியை சேர்ந்த 14-வயது சிறுமி, 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கரோனா பெருந்தொற்று கால கட்டத்துக்கு பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் வீட்டில் இருந்தபோது, தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்த நிலையில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, ஆனந்தன் (39) என்பவரை நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.