ஹைதராபாத்தில் 7 கிலோ தங்க பிஸ்கெட் பறிமுதல்

ஹைதராபாத்தில் 7 கிலோ தங்க பிஸ்கெட் பறிமுதல்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சூட்கேஸ்களில் துணிகளுக்கு இடையே 7 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை மறைத்து எடுத்து வந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in