Published : 06 Oct 2022 07:20 AM
Last Updated : 06 Oct 2022 07:20 AM

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்த 5 பேர் கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த செம்புலிவரம்,செங்காளம்மன் கோயில் அருகே நேற்றுமுன்தினம் சோழவரம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்றதமிழகம், கர்நாடகா மாநில பதிவெண்கள் கொண்ட 3 கார்களை துரத்திச் சென்று, அவற்றை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், சுமார் நூறு கிலோ புகையிலைப் பொருட்கள் பெங்களூருவி லிருந்து கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த சோழவரம் போலீஸார், 100 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.95 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, காரில் இருந்த செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சந்திராராம், நாராயண் லால், ஜெயபால், கணேசன், தங்க மாரியப்பன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x