சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதைப்பொருள் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதைப்பொருள் பறிமுதல் 
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து அதிக அளவு போதைப் பொருள் சென்னைக்கு கடத்திவர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த நோலின் நம்பீரா என்ற பெண் பயணியின் பார்சல்களை சோதனை செய்தபோது, அதில்
ரூ.8.03 கோடி மதிப்புள்ள 1 கிலோ 756 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் மற்றும் 1 கிலோ 431 கிராம் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் பறிமுதல் இதேபோல், சார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஹலஸ்கான் என்பவரிடம் இருந்து ரூ.22.45 லட்சம் மதிப்புள்ள 524 கிராம் தங்கம், கொழும்பில் இருந்து சென்னை வந்த ஸ்ரீமதி என்பவரிடம் இருந்து ரூ.28.24 லட்சம் மதிப்புள்ள 640 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த 2 பேரை சோதனை செய்தபோது, அவர்கள் ரூ.15.68 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வைத்திருந்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in