

தொப்பூர் அருகே லாரியில் ரகசிய அறையில் வைத்து கடத்திச் சென்ற 1,025 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய போலீஸார் நேற்று மாலை தொப்பூர் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற லாரியை சோதனையிட நிறுத்தியபோது லாரியில் இருந்த ஒரு நபர் இறங்கி தப்பியோடினார்.
போலீஸாரிடம் சிக்கிய ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு செல்லும் அந்த லாரியில் ரகசிய அறை அமைத்து 1,025 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி எடுத்துச் செல்வது தெரியவந்தது.
எனவே, லாரி மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மண்டூ சைகியா (27) என்பவரை கைது செய்தனர்.