Published : 02 Oct 2022 04:55 AM
Last Updated : 02 Oct 2022 04:55 AM

பெண் உதவி பொறியாளருக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

சிவகங்கை

சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை பெண் உதவி பொறியாளரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சந்தியா (29). இவர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளராக உள்ளார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சென்னையில் மென் பொறியாளராகப் பணிபுரியும் அமல் ஆரோக்கியதாஸுக்கும் (32) 2020-ல் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 110 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சந்தியாவின் 110 பவுன் நகைகளை அடகு வைத்தும், கூடுதலாக 40 பவுன் நகைகள், ரூ.47 லட் சத்தை வரதட்சணையாகக் கேட்டும் அமல் ஆரோக்கியதாஸ் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியா கொடுத்த புகாரின்பேரில், அமல் ஆரோக்கியதாஸ், அவரது தாயார் ஆரோக்யமேரி (60), உறவினர்கள் அமலா (36), ஜெரால்டு (40) ஆகிய 4 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x