கோவை | பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது

கோவை | பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது
Updated on
1 min read

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மோகன். மண்டல பாஜக தலைவராக உள்ளார்.

இவருக்கு சொந்தமான, வெல்டிங் உபகரணங்கள் விற்கும் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வெள்ள கிணறு பெரிய சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபீக்(31) என்பவரை ரத்தினபுரி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இந்து இயக்க ஆதரவாளர்களான சச்சின், மதன்குமார் ஆகியோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நாசர் அகமது(30), ஷேக் பரீத்(30), முகமது தவ்பிக் (25) ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in