திருவள்ளூர் | இளைஞருடன் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை முயற்சி: இளைஞர்கள் 4 பேர் கைது

திருவள்ளூர் | இளைஞருடன் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை முயற்சி: இளைஞர்கள் 4 பேர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை அருகே மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றார். அப்போது, அங்கு இளைஞர் ஒருவரிடம் சிறுமி பேசிக் கொண்டிருந்தார். இதனை அங்கு மறைந்திருந்த இளைஞர்கள் 4 பேர், தங்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து அதை சிறுமியிடம் காட்டி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி, கடந்த 25-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தீக்குளித்தார்.

இதையடுத்து, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள பென்னலூர்பேட்டை போலீஸார், வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக, மோவூர் பகுதியை சேர்ந்த ராசு என்கிற கோகுல கிருஷ்ணன், அஜித்குமார், அஜித் மற்றும் குரங்கு தண்டலத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in