

திண்டுக்கல் குடைபாறைபட்டியில் பாஜக நிர்வாகியின் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திண்டுக்கல் குடைபாறைபட்டியில் பாஜக நிர்வாகி பால்ராஜ் என்பவரது கார், ஐந்து மோட்டார் சைக்கிள்கள் கடந்த 24-ம் தேதி தீ வைத்து எரிக்கப்பட்டன. இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதில் தொடர்புடைய பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர் புடைய மூன்று பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் பேகம்பூரைச் சேர்ந்தஹபீப்ரகுமான்(27), முகமது இலி யாஸ்(26), முகமது ரபிக்(26 ஆகிய 3 பேரும் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3-ல் மாஜிஸ்திரேட் ரெங்கராஜ் முன் நேற்று சரணடைந்தனர்.
இவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.