

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 22-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு சம்பவத்தையும் விசாரிக்க தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படை காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.