

மதுரையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான இவரது வீடு அருகிலேயே அலுவலகம் உள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அவரது வீட்டின் முன் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் முன் பலத்த சப்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.