

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக் திருடனை போலீஸார் கைது செய்து சிறை யில்அடைத்தனர். விழுப்புரம் ஜானகிபுரம் டாஸ் மாக் கடை அருகே, திருட்டுப் போன தனது இரு சக்கரவாகனத்தை நேற்று பார்த்தததாக அதன் உரிமையாளர் விழுப்புரம் தாலுகாகாவல்நிலையத்திற்கு தகவல்அளித்துள்ளார். அதனடிப்படை யில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு இருந்த, பண்ருட்டி அருகே திருவதிகையைச் சேர்ந்தஅய்யனார் (எ) அப்பு (28) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரத்தில் பல பகுதிகளில் இரு சக்கரவாகனங்களை திருடியதும், அவை களை விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன், ரெட்டணையைச் சேர்ந்த குமரன், கள்ளபட்டைச் சேர்ந்த அசோக் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து போலீஸார் 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர். அப்பு நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீட்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்ட எஸ்பி நாதா கூறுகையில், "அரசுப் பேருந்து களில் மாணவர்கள் படியில் பயணிப்பது குறித்து போலீஸார் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது" என்றார் தொடர்ந்து போலீஸார் 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர். அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.