

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(25) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
அந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, கடந்த 1.5.2019-ல் விக்னேஷ் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்தபெண்ணை திருமணம் செய்யாமல் விக்னேஷ் ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்தார். இது குறித்து அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று, விக்னேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடுவழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.