

கமுதி: கமுதி அருகே பள்ளி மாணவிகளை கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சிலிப்பி கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள கருவேலங்காட்டுப் பகுதியில் தங்கினர். அங்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை சிலிப்பி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் அவ்வழியாக எழு வனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். மாணவிகளை வழிமறித்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவிகள் மீண்டும் சிலிப்பி கிராமத்துக்கு ஓடி வந்து பெற்றோர்களிடம் தெரிவித்துள் ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் திரண்டு சென்று, கருவேலங்காட்டுப் பகுதியிலிருந்த இளைஞர்களை பிடித்து மண்டலமாணிக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் பரமக்குடி வட்டம் அருங்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரவீன்(24), விருதுநகர் மாவட்டம் வீரசோழனை சேர்ந்த தம்பிதுரை மகன் சஞ்சய்(19), மேலப்பருத்தியூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பூப் பாண்டி(19) எனத் தெரிய வந்தது.
சிலிப்பி கிராமத்தைச் சேர்ந்த மச்சையா கொடுத்த புகாரின் பேரில் பிரவீன் உள்ளிட்ட 3 பேரை யும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் சஞ்சய், பிரவீன் ஆகி யோர் மீது பார்த்திபனூர், பரமக்குடி, வீரசோழன், மானாமதுரை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல்வேறு வழக் குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.