சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம்: தந்தை உள்ளிட்ட 3 தீட்சிதர்கள் கைது

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம்: தந்தை உள்ளிட்ட 3 தீட்சிதர்கள் கைது
Updated on
1 min read

சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை உள்ளிட்ட 3 தீட்சிதர்களை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவரின் 14 வயது மகள், தற் போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு, அதேபகுதியைச் சேர்ந்த 24 வயது தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து, கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு வினர் கடலூர் மாவட்ட எஸ்பியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர். அதன் பேரில் திருமணமான அச்சிறுமி மற்றும் அவரது தந்தையை நேற்று முன் தினம் கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸார் கடலூருக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்டனார். இது குறித்து சமூக நல துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவ மணி, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், "சிதம்பரத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது.சிறுமி தனக்கு நடந்த திருமணத்தை ஒப்புக் கொண்டதால், குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தை, சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் (24) மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர் (42)ஆகியோர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கடலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்த, சிறுமியின் தந்தை உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in