Published : 21 Sep 2022 11:43 PM
Last Updated : 21 Sep 2022 11:43 PM
புது டெல்லி: நண்பர்கள் இவருக்குள் 500 ரூபாயினால் ஏற்பட்ட தகராறு தலைநகர் டெல்லியில் கொலையில் முடிந்ததுள்ளது. அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இந்த சம்பவம் கடந்த 18-ம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு 10.40 மணி அளவில் போலீசாருக்கு மருத்துவமனையில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கூர்மையான ஆயுதத்தால் காயம்பட்ட நபர் ஒருவர் சிகிச்சையின் போது உயிரிழந்து விட்டார் என்பதுதான் அந்த தகவல். போலீசார் அதனை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கொலையான நபரின் பெயர் ஷாருக் என்றும். அவருக்கு 22 வயது தான் ஆகிறது என்பதையும் முதலில் கண்டறிந்துள்ளனர். அவர் இரும்பு பட்டறை ஒன்றில் அச்சுகளை உருவாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர் சல்மான் என்பவருடன் காணப்பட்டுள்ளார். இருவரும் அதே பட்டறையில் ஒன்றாக வேலை செய்து வந்தவர்களாம்.
இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக் கொலை ஆனது முதல் சல்மான் தலைமறைவாகி உள்ளார். அதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை தேடி பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் போலேசார் அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது தனக்கும், தனது நண்பன் ஷாருக்கும் இடையே போதை பொருள் வாங்குவது தொடர்பாக 500 ரூபாயில் சிக்கல் எழுந்ததாகவும். அதில் தனக்கு ஆத்திரம் ஏற்பட்ட காரணத்தால் அவனை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT