ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவருக்கு 5 ஆண்டு சிறை - என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவருக்கு 5 ஆண்டு சிறை - என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

கொச்சி: கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சாய்பு நிகார். இவர் பஹ்ரைனில் விளம்பர நிறுவனம் ஒன்று நடத்தியபோது, அல் அன்சார் சலாஃபி மையத்தில் நடந்த ஐ.எஸ் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். கைது செய்யப்படுவோம் என உணர்ந்த அவர், கத்தார் தப்பிச் சென்றார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். ஐஎஸ் இயக்கத்துக்காக அவர் வசூலித்த நிதியை, சிரியாவுக்கு செல்ல திட்டமிட்ட இதர குற்றவாளி ஒருவரிடம் ஒப்படைத்ததை என்ஐஏ கண்டுபிடித்தது. ஆசியாவில் இந்தியாவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவது, தீவிரவாத அமைப்பில் சேருவது, தீவிரவாத குழுக்களுக்கு உதவுவது, தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டதற்காக போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு சாய்பு நிகார் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் மீதான வழக்கில் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இவருக்கு பல பிரிவுகளில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இவற்றை மொத்தமாக 5 ஆண்டுகளில் அனுபவிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in