

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் மாணவி களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என குழந் தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஆதிதிராவிடர் நல விடுதியில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள் பலர் தங்கி படித்துவருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் தங்கி படித்துவரும் 4 பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தினர். நேற்று போலீஸாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், புகார் வந்ததும் குழு அமைத்து விசாரணை நடத்தினோம். எங்கள் தரப்பில் முதற்கட்ட விசாரணையை நடத்தி விட்டோம். இருப்பினும், உண்மை நிலையைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தோம். அதன்படி, போலீஸாரும் விசாரிக்கின்றனர். விசாரணை முடிந்தபிறகுதான் எதையும் கூற முடியும் என்றனர்.