Published : 19 Sep 2022 02:46 PM
Last Updated : 19 Sep 2022 02:46 PM

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4,813 குவிண்டால் பறிமுதல்

ரேஷன் அரிசி | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4,813 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன் படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4,813 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசியும், இக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதில் ஈடுபட்ட 174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x