

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. அதில் தவறான தொடுதல்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அப்போது மாணவிகள் சிலர் தங்கள் பகுதியில் உள்ளமளிகைக் கடைக்காரர் தங்களிடம் தவறான தொடுதல்களில் ஈடுபடுவதாக தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமையாசிரியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
மாணவிகளிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீஸார் அப்பகுதியை சேர்ந்தமளிகை கடைக்காரர் நடராஜ் (62) என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.