

அலங்காநல்லூர் அருகே ஆலை மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் அருகே கம்மாபட்டியைச் சேர்ந்தவர் பொன்மணி (26). இவர் தனிச்சியத்தில் உள்ள தனியார் ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலை யில் அவரது வீட்டின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்தனர். சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீஸார் கொலையாளிகளை தேடி வரு கின்றனர்.