Published : 18 Sep 2022 04:45 AM
Last Updated : 18 Sep 2022 04:45 AM

விக்கிரவாண்டியில் நீதிமன்ற உத்தரவின் படி ஓராண்டுக்கு முன் இறந்தவரின் உடல் மறுபிரேத பரிசோதனை

விக்கிரவாண்டியில் கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்த ஓட்டுநர் ஜாபர் உடல் மறு பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. உள்படம்: ஜாபர்

விழுப்புரம்

விக்கிரவாண்டியில் ஓராண்டிற்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் படி இறந்தவரின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது..

விக்கிரவாண்டி உஸ்மான் நகரைச் சேர்ந்தவர் அப்துல் சுபான்மகன் ஜாபர் (35). கார் ஓட்டுநரானஇவர் கடந்த 2021- ம் ஆண்டுஜூலை மாதம் 6-ம் தேதி துாக்கிட்டுதற்கொலை செய்து கொண் டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு மத சம்பிரதாய படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில்,

அவரது மனைவி அஷரப் நிஷா, "தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என சந்தேகத்தின் பேரில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி நேற்று காலை, விக்கிரவாண்டி ஒயிட்மசூதி அருகிலுள்ள கபர்ஸ்தானில், புதைக்கப்பட்டிருந்த ஜாபர் உடலை, சமூக நல தாசில்தார் கணேஷ், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோரது முன்னிலையில், பேரூராட்சி பணியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லுாரி டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர் மதுவர்த்தனா, லேப்டெக்னீஷியன் மற்றும் உதவியாளர்கள் கொண்டகுழுவினர் அங்கேயே, ஜாபர்உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

இறந்தவரின் உறவினர் கள், மனைவி அஷரப்நிஷா, வருவாய் ஆய்வாளர் சார்லின், வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர். அங்கேயே, ஜாபர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x