Published : 17 Sep 2022 06:14 AM
Last Updated : 17 Sep 2022 06:14 AM

மானாமதுரையில் 5 பேரை வாளால் தாக்கி வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது

மானாமதுரை: மானாமதுரையில் வாளால் தாக்கி அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மானாமதுரை உடைகுளத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு(41). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கணேசனும் இரு தினங்களுக்கு முன்பு இரவில் மோட்டார் சைக்கி ளில் மானாமதுரை புறவழிச் சாலையில் சென்றனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வாளால் அவர்களை தாக்கிவிட்டு, கணேசனிடம் இருந்து மொபைல் போன், ரூ.1,000-த்தை பறித்துக் கொண்டு தப்பியது.

அப்போது கால் பிரிவு கிராமத்தைச் சேர்ந்த துரைபாண்டி(42) என்பவர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவரிடம் 4 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கிவிட்டு வழிப்பறி செய்தது குறித்து ஜோதிபாசு, கணேசன் தெரிவித்தனர்.

இதையடுத்து துரைபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் ஜோதிபாசுவை ஏற்றி கொண்டு அந்த கும்பலை தேடிச் சென்றார். கால் பிரிவு விலக்கு அருகே சென்றபோது, அந்த கும்பல் துரைபாண்டி, ஜோதிபாசுவை தாக்கிவிட்டு, மோட்டார் சைக் கிளை பறித்துச் சென்றது. மேலும் அதே கும்பல் முத்தனேந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், பிரபு ஆகிய இருவரையும் தாக்கி விட்டு, இருவரது மொபைல் போன்களையும் பறித்து சென்றது.

ஒரே இரவில் வாளால் 5 பேரை தாக்கிவிட்டு 3 மொபைல்கள், பணம், மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவங்களில் மானாமதுரை பகுதியை சேர்ந்த பரத்குமார், சந்தோஷ்குமார், நிதிஸ்வரன் மற்றும் சிறுவன் ஆகிய 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 4 மொபைல்கள், ரூ.4,000-த்தை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x