

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அயன்நத்தம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஸ்டீபன் அந்தோணிராஜ்(52) என்பவர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கேலி, கிண்டல் செய்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். மாணவியின் தந்தை அளித்த புகாரில் நத்தம்பட்டி போலீஸார் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.