

குன்னூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சரவணன் (39). இவர், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, உயர் அதிகாரிகளிடமும் அந்த பெண் காவலர் புகார் அளித்தார்.
இதையடுத்து, மஞ்சூருக்கு சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், சரவணன் மீதான நடவடிக்கை போதாது, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, அந்த பெண் காவலர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மேல்குன்னூர் போலீஸார் வழக்கு பதிந்து, சரவணனை நேற்று கைது செய்தனர்.