வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் நகைகள் திருட்டு: மேற்கு வங்க கொள்ளையன் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் நகைகள் திருட்டு: மேற்கு வங்க கொள்ளையன் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து, 78 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தஇளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புழல் கதிர்வேடு 4-வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(38). இவர்,கடந்த மாதம் 18-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 78 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், மேற்குவங்க மாநிலம் பிர்கும் மாவட்டத்தைச் சேர்ந்த கமால்ஷேக் (19) என்பவர், பார்த்திபன் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளைத் திருடியது தெரியவந்தது.

பின்னர், தலைமறைவாக இருந்த கமால்ஷேக்கை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 78 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி ஜிலால்ஷேக்கைத் தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in