

‘பிராங்க் வீடியோ’ வெளியிட்டது தொடர்பாக ‘கோவை 360 டிகிரி’ என்ற யூ டியூப் சேனல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ‘பிராங்க் வீடியோஸ்’ என்ற பெயரில் பெண்கள், முதியவர்கள் மீது மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவு கருவிகள் மூலம் அவர்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை 360 டிகிரி என்ற‘யூடியூப்’ சேனல் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சைபர் கிரைம் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்கள் தொடர்பாக தேவையில்லாமல் பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.