

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த23-ம் தேதி இரவு 9 மணிக்குசெங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ரயில்வேபாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வா (29) ஈடுபட்டார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏற முற்பட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா இது பெண்கள் பெட்டி, எனவே இதில் ஏறக்கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துபெண் காவலர் ஆசிர்வாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
உடனடியாக ரயில்வே போலீஸார் ஆசிர்வாவை மீட்டுபெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக, எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரைத்தேடி வந்தனர்.இந்நிலையில், மர்ம நபரை எழும்பூர் ரயில்வே போலீஸார் நேற்றுகைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பது தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியுடன் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நடைபாதை பகுதிகளில் தங்கி பூமற்றும் பழ வியாபாரம், செல்போன் பவுச்சுகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
ரயிலில் பூ, பழ வியாபாரம் செய்ய ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அனுமதி மறுத்து வந்ததாகவும், இதனால் பிழைப்புக்கு இடையூறு செய்யும் காவலர்கள் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் தனசேகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு மது போதையில் தனசேகர் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளார். அப்போதுஅங்கு பணியில் இருந்த ஆசிர்வா இங்கு ஏறக்கூடாது எனக் கூற, தன்னை பெண்கள் மத்தியில் அவமானப்படுத்தியதால், தான் வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் குத்தி விட்டு தனசேகர் தப்பி ஓடியுள்ளார்.
மேலும், தனசேகரை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆர்பிஎப்பெண் காவலர் ஆசீர்வா பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.