

விருத்தாசலம்: திட்டக்குடி அருகே சொத்துப் பிரச்சினைத் தொடர்பாக அண்ணன் மனைவியைக் கொன்ற தம்பியை ராமநத்தம் போலீஸார் கைது செய்தனர்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தை அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-பிரேமலதா தம்பதியர். வெங்கடேசன் சென்னையில் வேலை செய்து வந்தார். வெங்கடேசனின் சகோதரர் காசிநாதன் சொத்துப் பிரச்சினைத் தொடர்பாக அவ்வப்போது வெங்க டேசனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் நேற்று முன் தினம் வெங்கடேசன் வீட்டுக்கு மது போதையில் சென்றுள்ளார்.
அப்போது பிரேமலதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் சொத்து தொடர் பாக பேசியதாகவும், அப் போது இருவருக்கும் இடையேதகராறு எழுந்தது. இந்நிலையில், கத்தியால், பிரேமலதாவை குத்தியுள்ளார்.
பலத்தக் காயமடைந்த பிரேமலதா கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் பிரேமலதா உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
ராமநத்தம் காவல் நிலை யத்தில் காசிநாதன் நேற்று சரணடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.