

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் பரோடா பிரதானச் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவரது வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை கடந்த 22 ம் தேதி மர்ம நபர் திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(57) சைக்கிளைத் திருடியதும், சென்னையில் பல்வேறு இடங்களில் சைக்கிள்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேஷைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 40 சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர்.