

தூத்துக்குடி: சாத்தான்குளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் கோர்கள் திருடுபோயின.
இதுதொடர்பாக மின்வாரிய இளநிலை பொறியாளர் எட்வர்ட் ஜெயபாலன் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், புதியம்புத்தூர் நீராவி மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பரமசிவன் (30) என்பவரை போலீஸார் கைது செய்தனர். ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 126 கிலோ காப்பர் வயர் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கோர்கள் மீட்கப்பட்டன.