

ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த சுதாகர். இவர் தலைமுடியை சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். ஜூன் மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு சிவன் கோயிலில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை வாங்கி வந்திருந்தார்.
இதனிடையே, ஜூலை 2-ம் தேதி சுதாகர் வீட்டுக்கு வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடி மற்றும் 3 செல்போன்களை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும், இதுதொடர்பாக சென்னை அம்பத்துார் எஸ்.வி.நகரைச் சேர்ந்த பொன் முருகன், செங்குன்றத்தைச் சேர்ந்த பாபாமுருகன் ஆகியோரை கைது செய்தனர். தொழில் போட்டி காரணமாக திருட்டு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.