Last Updated : 17 Aug, 2022 04:10 AM

 

Published : 17 Aug 2022 04:10 AM
Last Updated : 17 Aug 2022 04:10 AM

திருப்பத்தூரிலும் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மோசடி: ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரேயுள்ள வணிக வளாகத்தில் மூடியிருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம். படம்.ந.சரவணன்.

திருப்பத்தூர்

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ‘ஐஎப்எஸ் நிதி நிறுவனம்’ திருப்பத்தூர் மாவட் டத்திலும் பல இடங்களில் கிளை அலுவலகம் திறந்து ஏஜென்ட் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்துள்ளது. புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என முகவர்கள் மிரட்டியதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் செய்வதறியாமல் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட் பாடியை தலைமையிடமாக கொண்டு ஐஎப்எஸ் நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம் பரம் செய்தது.

இதை நம்பிய பொதுமக்கள் இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சத்தில் இருந்து தங்களது வசதிக்கு ஏற்ப பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில், சட்ட விதிகளுக்கு மீறி பொதுமக்களிடம் இருந்து ஐஎப்எஸ் நிறுவனம் கோடிக்கணக் கில் பணத்தை முதலீடு பெறுவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஐஎப்எஸ் நிறுவன உரிமையாளர்கள் தலை மறைவாகினர். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க தொடங்கினர்.

அதன்பேரில், ஐஎப்எஸ் நிறு வனத்துக்கு தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தி, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், மடிக்கணினிகள், செல்போன்கள், தங்க நகைகள், கார் மற்றும் ரொக்கப்பணம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகம் முழு வதும் 88 ஆயிரம் பேரிடம் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தினர் பணத்தை வசூல் செய்து மெகா மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய இடங்களில் கிளை அலு வலகம் திறந்து, ஏஜென்ட் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்துள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை. மாறாக, இந்நிறுவனத்தில் நேரடி யாகவும், ஏஜென்ட் மூலம் பணம் முதலீடு செய்தவர்களை ஏஜென்டுகள் மறைமுகமாக மிரட்டு வதால் புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை என பாதிக்கப் பட்டவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் வரை பணம் முதலீடு செய்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஐஎப்எஸ் நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்யும் படி ஏஜென்டுகள் எங்களிடம் கூறினர். அதன்பேரில், நான் ரூ.20 லட்சம் முதலீடு செய்தேன். ஒரு மாதம் மட்டும் எனது வங்கி கணக்கில் வட்டி தொகை வரவு வைக்கப்பட்டது.

அதன் பிறகு எனக்கு வட்டி கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஏஜென்டிடம் கேட்டபோது மொத்த மாக சேர்த்து வழங்கப்படும் எனக்கூறினர். அதற்குள்ளாக இந்நிறுவனம் மோசடி புகாரில் சிக்கிக் கொண்டதால் போட்ட பணம் கிடைக்குமா? என தெரியவில்லை. என்னைப்போல திருப்பத்தூர் மாவட்டத்தில் நிறையபேர் இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர்.

குறிப்பாக, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரூ.100 கோடிக்கு மேல் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வேலூர், சென்னை, காஞ்சி புரம் போன்ற பகுதிகளில் இந்நிறு வனத்தில் முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர்.

அதேபோல, இங்குள்ளவர்களும் புகார் அளிக்க முடிவு செய்த போது எங்களிடம் பணம் வாங்கிய ஏஜென்டுகள் புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது, கொஞ்ச நாள் பொருத்திருங்கள் விரைவில் பணம் பெற்று தருகிறோம் என மறைமுகமாக மிரட்டுகின்றனர். இதனால், பணம் முதலீடு செய்த நாங்கள் செய்வதறியாமல் இருக்கிறோம்’’ என்றார்.

இது குறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் eow-insifcase@gmail.com என்ற ஆன்லைன் மூலம் புகார் அளிக்க ஏற்கெனவே அறிவுறுத்தியுள் ளோம். அதன்பேரில், வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அங்கு எங்கெல்லாம் ஐஎப்எஸ் நிறுவனம் அலுவலகம் திறந்துள்ளது, யாரெல்லாம் ஏஜென்டுகளாக நியமிக்கப் பட்டுள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்கப்பட வுள்ளன. அதன்பேரில் விரைவில் விசாரணை தொடங்கப்படும்.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் ஐஎப்எஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தால் ஆன்லைன் மூலம் தங்களது புகாரை பதிவு செய்யலாம். அதன் பேரில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x