

திருவாரூர்: திருவாரூர் அருகே திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, நேற்று முன்தினம் பி.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் 2-ம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றது.
அதில், பாஸ்கர் என்பவரின் பெயரில் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவைச் சேர்ந்த திவாகரன்(29) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வெழுதியது தெரியவந்தது. பிளஸ் 2 முடித்துள்ள அவர், திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.
பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டச்செயலாளர் ரமேஷ் என்பவர் கேட்டுக்கொண்டதால், பாஜக மாவட்டத் தலைவரான லட்சுமாங்குடி தோட்டச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர்(48) என்பவருக்குப் பதிலாகதான் தேர்வுஎழுதியதை திவாகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, திவாகரன், ரமேஷைநேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீஸார், நேற்று பாஸ்கரை கைது செய்தனர்.